Monday, December 11, 2017 06:05:50 AM

மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Sun Sep 17, 5:53 pm

“ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் (Mental fetter)”

-கௌதம புத்தர் – சுத்த நிபாத சுலோகம் 798

கடந்த கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தென்னிலங்கையிலுள்ள இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துள்ளார். இலங்கைத் தீவின் அரசியலில் படைத்தரப்பைப் போல, ஆனால் படைத்தரப்புக்கும் முன்னரே அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகக் காணப்படுவது மகாசங்கம். அண்மையில் மட்டக்களப்பில் ஒரு தலைமைப் பிக்கு நீதிமன்றத்தின் கட்டளையை பலர் பார்த்திருக்கப் பகிரங்கமாகக் கிழித்தெறிந்தார். தமிழ்– முஸ்லிம் காணிப் பிணக்கொன்றில் தமிழர்களுக்கு சாதகமாக தலையிட்டு அவர் அவ்வாறு செய்தார். ஆனால் இலங்கைத்தீவின் சட்டம் ஒழுங்கை பரிபாலிக்கும் எந்தவொரு தரப்பும் அவருக்கெதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. அந்தளவிற்கு பிக்குக்கள் நாட்டில் சக்தி மிக்கவர்களாகக் காணப்படுகிறார்கள்.

இச்சிறிய தீவில் அரசியல் தீர்வைப்பற்றி விவாதிப்பதாக இருந்தாலும் நல்லிணக்கத்தை பற்றி சிந்திப்பதாயிருந்தாலும் அதை விகாரைகளிலிருந்து தொடங்கினால்தான் விளைவுகள் யதார்த்தமானவைகளாக அமையும்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.