Wednesday, January 17, 2018 12:57:53 PM

தமிழ் மக்களிடம் சமய ரீதியான வேற்றுமைகள் கூடாது: டி.எம்.சுவாமிநாதன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Sep 16, 1:27 pm

தமிழ் மக்கள் மத்தியில் சமய ரீதியான வேற்றுமைகள் இருக்கக் கூடாது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் மூலமே பல்வேறு முன்னேற்றங்களை அடைய முடியும் என்று இந்துமத அலுவல்கள்,

இந்து கலாசாரம் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையின் ஏற்பாட்டில் அகில இலங்கை சைவ மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நீராவியடியில் அமைந்துள்ள சைவபரிபாலன சபையின் ஆச்சிரம மண்டபத்தில் ஆரம்பமாகியது. மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.