Monday, December 11, 2017 06:07:45 AM

வித்தியா வழக்கு விசாரணை! தலைவர் பிரபாகரனை நினைவுபடுத்திய நீதிபதி இளஞ்செழியன்.

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Sep 14, 11:09 am

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கின் இறுதி சாட்சி விசாரணையின் போது சந்தேகநபரான சுவிஸ் குமாரிடம் சாட்சியம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

தான் கண்ணாடியை போட்டு வித்தியாவை பார்த்ததாகவும், தான் குற்றத்தை மேற்கொள்ளவில்லை எனவும், சுவிஸ் குமார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் சம்பவம் நடைபெற்றபோது அவ்விடத்தில் இருக்கவில்லையென எதிர்தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி இளஞ்செழியன், குற்றத்தைப் புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை நேரடியாக அனுப்பி வைத்தவர் பிரபாகரன் எனவும் அவர் சம்பவ இடத்தில் இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.