Monday, February 19, 2018 02:52:37 AM

மேஜர் றோய் / கௌதமன்

Photo Gallery1 Photo By ரொபின்சன் - Sat Apr 02, 2:37 pm

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மூத்த அணித் தலைவனாகிய றோய் 1991 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் .maaverar1 திருமலை மாவட்ட படையணியின் தாக்குதல் அணியில் ஒரு போராளியாக தன் களச் செயற்பாடுகளை துவங்கிய றோய் திருமலை, மட்டு அம்பாறை காடுகளில் சிங்கள இராணுவ முகாம்கள் மீதான பல தாக்குதல்களில் திறமுடன் களமாடி இளம் அணித் தலைவனாக வளர்ந்தான் . 1995 ம் ஆண்டு வன்னிக்கு மாற்றப்பட்ட றோய் தேசியத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த எம். ஓ. படைப்பிரிவில் இளம் அணித் தலைவனாக இணைக்கப்பட்டான் .வேவு மற்றும் புலனாய்வுப் பணிகளிலும் போர்ப்பயிற்சி ஆசிரியனாகவும் செயற்பட்ட றோய் 1999 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் இணைக்கப்பட்டான் .

படையணியில் வீரமணியின் கொம்பணியில் பிளாட்டூன் லீடராக களமிறங்கிய றோய் ஊரியான் பரந்தன் சுட்டதீவு முன்னரங்கில் பாதுகாப்புக் கடமைகளிலும் பயிற்சிகளிலும் தனது பிளாட்டூனை திறனுடன் வழிநடத்தினார்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.