Thursday, February 22, 2018 07:42:36 AM

பெண்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே சமூகமொன்றின் வெற்றி; மகளிர் தினச் செய்தியில் மைத்திரி!

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Mar 08, 9:58 am

International-Womens-Day-Webசமூகமொன்று பெண்களுக்கு வழங்கும் அங்கீகாரமே, அந்தச் சமூகத்தின் அபிவிருத்தியின் அளவுகோல் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஒரு சமூகம் அதன் பெண்களுக்கு வழங்கும் அங்கீகாரம் அச்சமூகத்தின் அபிவிருத்தித் தரத்தின் அளவுகோலாகக் கருதப்படுகிறது. ‘தொட்டிலை ஆட்டும் கரங்கள் உலகை ஆளும்’ என்ற பழமொழி இலங்கை சமூகம் அதன் வரலாறு நெடுகிலும் பெண்களின் கௌரவமான சமூக அந்தஸ்தைப் புரிந்து வைத்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

என்றாலும் இன்றைய நிலைமையை நாம் எடுத்து நோக்கினால் கடுமையான பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் பல்வேறு யுகங்கள் கடந்துள்ள நிலையில், பெண்களின் வகிபாகம் குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். உலகில் முதலாவது பெண் பிரதமர் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைப் பெற்ற நாடு என்றபோதிலும், இந்த நாட்டின் பெண்களும் பெண் பிள்ளைகளும் இன்னும் அவர்களது பாதுகாப்புக் குறித்த பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.