Tuesday, January 16, 2018 02:17:23 AM

பெண்கள் பாதுகாப்பு குறித்த பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்: ஜனாதிபதி

Photo Gallery1 Photo By thiru - Tue Mar 08, 3:59 am

maithri20151003அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய மூலமாகவுள்ள பெண்கள் அவர்களது பாதுகாப்புக் குறித்த பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

‘ஒரு சமூகம் அதன் பெண்களுக்கு வழங்கும் அங்கீகாரம் அச்சமூகத்தின் அபிவிருத்தித் தரத்தின் அளவுகோலாகக் கருதப்படுகிறது. தொட்டிலை ஆட்டும் கரங்கள் உலகை ஆளும் என்ற பழமொழி இலங்கை சமூகம் அதன் வரலாறு நெடுகிலும் பெண்களின் கௌரவமான சமூக அந்தஸ்தைப் புரிந்து வைத்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

என்றாலும் இன்றைய நிலைமையை நாம் எடுத்து நோக்கினால் கடுமையான பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் பல்வேறு யுகங்கள் கடந்துள்ள நிலையில், பெண்களின் வகிபாகம் குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

உலகில் முதலாவது பெண் பிரதமர் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைப் பெற்ற நாடு என்றபோதிலும், இந்த நாட்டின் பெண்களும், பெண் பிள்ளைகளும் இன்னும் அவர்களது பாதுகாப்புக் குறித்த பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.