Sunday, July 23, 2017 12:34:36 PM

இறுதிப் போரில் பிரபாகரனை காப்பாற்ற முனையவில்லை: ரொபேர்ட் ஓ. பிளேக்

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Jul 14, 6:13 pm

இலங்கையின் இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, தான் காப்பாற்ற முனைந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக கடைமையாற்றிய ரொபேர்ட் ஓ. பிளேக் நிராகரித்துள்ளார்.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் கப்பல்கள் மற்றும் படகுகளை மூழ்கடிப்பதற்கு அமெரிக்கா உதவியது என்கிற தகவலும் பொய்யானது என்று தெரிவித்துள்ள அவர், ஆனாலும் கப்பல்களின் இருப்பிடம் தொடர்பிலான தகவல்களை அமெரிக்க புலனாய்வுப் பிரிவு இலங்கைக்கு வழங்கியதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

வொஷிங்டனை மையமாகக் கொண்ட, இலங்கை சம்பந்தமான அரச சார்பற்ற நிறுவனமொன்றுடன், அண்மையில் மேற்கொண்ட சந்திப்பொன்றின் போதே இந்தக் கருத்துகளை ரொபேர்ட் ஓ. பிளேக் வெளியிட்டுள்ளார்.

2006 தொடக்கம் 2009 வரை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தான் கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகக் காணப்படும் பொய்யான தகவல்களை இல்லாது செய்வதற்கு விரும்புவதாகவும், காணப்படும் வதந்திகளில் மிகப்பெரிய வதந்தியாக, கடற்கரையில் வைத்துப் பிரபாகரனை மீட்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image