Sunday, February 18, 2018 10:45:05 PM

யாழ்ப்பாணத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடி பொருட்கள் மீட்பு

By BBC Tamil - Wed Mar 30, 5:49 am

இலங்கையில் யாழப்பாணம் சாவகச்சேரி பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உட்பட, வெடி பொருட்களை புதன்கிழமை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

Image copyright
bbc

Image caption

துப்பாக்கி குண்டுகள்(கோப்புப் படம்)

சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகலொன்றினையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது இவை மீட்கப்பட்டன.

ஒரு தற்கொலை அங்கியும், 12 கிலோ கிராம் டி.என்.டி. வெடிப்பொருள் அடங்கிய மூன்று பொதிககளும் 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கி ரவைகளும், 4 கிளேமோர்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்….

Leave a Reply

Comments are closed on this post.