Saturday, November 25, 2017 12:32:20 AM

இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை; ஆகவே, விசாரணைகளை எதிர்கொள்வதில் பிரச்சினையில்லை: மகேஷ் சேனநாயக்க

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Jul 06, 9:06 am

இலங்கை இராணுவம் எந்தவிதமான போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை. எனவே, இராணுவத்தின் மீது சுமத்தப்படும் எந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகளை எதிர்கொள்வதற்கு தயார் என்று புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை பொறுத்தமட்டில் நாட்டின் பொது தண்டனைக் கோவை சட்டம் மற்றும் இராணுவச் சட்டம் ஆகிய இரண்டு சட்டவிதிமுறைகளுக்கும் உட்பட்டவர்கள். எனவே, இராணுவத்தினர் தவறுகள் செய்வதற்கு மிகவும் குறைவான சந்தர்ப்பங்களே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 22வது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்று புதன்கிழமை இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “இராணுவத்தின் பலம் ஒழுக்கமாகும்” ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் இல்லாவிடின் இராணுவம் என்ற பேச்சுக்கு இடமில்லை….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.