Tuesday, February 20, 2018 08:38:41 AM

அதிகூடிய பலன்களைப் பெறக்கூடிய அபிவிருத்தி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை: ரணில்

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Jul 06, 9:08 am

நாட்டு மக்கள் ஆகக்கூடிய பலன்களைப் பெறக்கூடிய அபிவிருத்தி முறையொன்றை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அடுத்த வருடம் தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் வருடமாக அமையும். இவ்வருடத்தில் 6 சதவீத பொருளாதார அபிவிருத்தி எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது பல முதலீடுகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிதி நகரத்தைக் கட்டியெழுப்பும் தேவை ஏற்படும். இதன் மூலம் உரிய முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சட்டம் மற்றும் சமாதானத்தை மதிக்கும் அபிவிருத்தி கொண்ட நாடொன்றைக் கட்டியெழுப்புவதே சமகால அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.