Tuesday, January 16, 2018 02:14:14 AM

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை ஓகஸ்ட் மாதம் வெளியாகும்: ரணில்

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Jun 30, 11:52 am

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று வழிநடத்தல் குழுவின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்சளவில் அதிகாரங்களைப் பகிர்வதற்கு சகல கட்சிகளும் இணங்கியிருப்பதுடன், அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட பிரிவினை நீங்கி, முதலமைச்சர்களுக்கான அதிகாரங்கள் கூட்டப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கத்துக்கும், மாகாண அரசாங்கத்துக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டாலும் நாட்டு மக்களே இறுதித் தீர்மானம் எடுப்பார்கள் என, அரசியலமைப்பு சபை செயலகத்தால் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மீதான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “1972ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது. அரசியலமைப்பு சபையின் இணக்கப்பாட்டுடன் அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

எனினும், 1947ஆம் ஆண்டு சிலோன் சுதந்திர சட்டத்தின் அடிப்படையாக முதலாவது குடியரசு அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டமை முரண்பாடாக இருந்தது….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.