Sunday, February 18, 2018 11:00:50 PM

மைத்திரி ஆட்சியில் சமாதானம் ஏற்படும் என்கிற மென் நம்பிக்கையும் ஆபத்தில்; சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவிப்பு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed May 17, 5:56 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் அனைத்து இனங்களுக்கிடையேயும்,

தரப்பினரிடையேயும் சமாதானமும் கூட்டுறவும் ஏற்படும் என்று காணப்பட்ட மெல்லிய நம்பிக்கை, தற்போது ஆபத்தில் காணப்படுவதாக சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) தெரிவித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன பதவியேற்று 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இலங்கையின் தற்போதையை நிலை தொடர்பில் சர்வதேச நெருக்கடிக் குழு ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தேசிய அரசாங்கத்தின் முதல் 9 மாதங்களில், கணிசமான அடைவுகள் பெறப்பட்ட போதிலும், அதன் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டங்கள், மெதுவடைந்துள்ளன அல்லது தலைகீழாக மாறியுள்ளன.

அத்தோடு, தேசிய அரசாங்கத்துக்குள் பிளவுகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ, உள்ளடக்கமான சமூகத்தை உருவாக்கவோ அல்லது தேசிய பாதுகாப்பு நிலைமையைச் சீர்படுத்தவோ, குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுக்கவில்லை. அத்தோடு, இந்த அரசாங்கம், குறுகியகால கட்சி, தனிநபர் அரசியல் கணிப்புகளை விடுத்து, சீர்திருத்தம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அரசியலில் இறங்க வேண்டும்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.