Monday, February 19, 2018 01:14:08 AM

இலங்கை இன்று குற்றவாளியாகவோ பிரதிவாதியாகவோ இல்லை: ஜனாதிபதி

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue May 02, 9:15 am

இன்றைய இலங்கை குற்றவாளியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாமல் சுதந்திரமான, சுயேச்சையான நாடாக முன்னோக்கிச் செல்வதில் எதுவித தடையும் இல்லை இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி கெட்டம்பேயில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் எந்தவொரு பிரதேசத்தையும் வெளிநாடுகளுக்கு தாரைவார்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. துறைமுக நகரத் திட்டத்தின் ஒரு பகுதியை சீனாவுக்கு நிரந்தரமாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது தொடர்பான நிபந்தனைகள் பற்றி சீனாவுடன் பேசி அவற்றை நீக்கியுள்ளோம். குத்தகை அடிப்படையில் காணியை சீனாவுக்கு தற்பொழுது வழங்கியுள்ளோம்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.