Wednesday, April 26, 2017 07:42:18 AM

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Apr 14, 5:20 pm

தமிழ் மக்கள் தற்பொழுது அனுபவிக்கும் துன்பங்கள்,

ஏமாற்றங்கள், ஏக்கங்கள் மற்றும் ஒதுக்கல்களில் இருந்து மீண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகளுக்கும் எங்களுடன் சேர்ந்து புத்தாண்டை அனுஷ்டிக்கும், எமது சிங்கள சகோதரர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மனம் மிக மகிழ்கின்றேன்.

எமது தமிழ் வருடங்கள் அறுபதாகும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயர் தாங்கியுள்ளதுடன், அவை மழை, காற்று, பயிர்வளம் போன்ற இயற்கையின் பலாபலன்களை மாற்றி அமைக்கும் தன்மையினைக் கொண்டவையாகவும் விளங்குகின்றன….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image