Tuesday, October 17, 2017 03:53:44 AM

சார்பற்ற வெளிநாட்டுக் கொள்கையோடு இலங்கை பயணிக்கிறது: ஜனாதிபதி

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Mar 24, 7:08 pm

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. ஆனால், அரசாங்கமோ நடுநிலையோடு செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் தற்போதைய நடுநிலை வெளிநாட்டு கொள்கையை முன்னெடுத்து வருகிறது. இதனை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இதன் காரணமாக இலங்கை உலக நாடுகளுடன் நட்புறவை கொண்ட நாடாக விளங்கி வருகிறது. சமீபகாலத்தில் இலங்கை சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளுடனும் புரிந்துணர்வுடன் முன்னோக்கி பயணிக்கின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொஸ்கோ நகரில் இலங்கை தூதரக அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ரஷ்யாவில் உள்ள இலங்கையர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.