Tuesday, January 16, 2018 02:11:58 AM

நாட்டு மக்கள் அனைவரதும் உரிமைகளைக் காக்க இலங்கை உறுதியாக உள்ளது: ஹர்ஷ டி சில்வா

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Mar 23, 10:32 am

நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகளையும் காக்க இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளது. அது, தொடர்பில் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான 30/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இன்னும் இரண்டு வருட கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர்பில், நேற்று புதன்கிழமை இலங்கை தொடர்பிலான அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கைக்கு பதிலளித்துப் பேசிய போதே பிரதி வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஆணையாளர் அலுவலகம் ஆகியவற்றோடு இணைந்து பணியாற்றி, வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கின்றது. எந்த நாட்டிலும் மனித உரிமைகள் தொடர்பான ஆவணம் முழுமையானது இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் நன்கு அறியும்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.