Monday, December 11, 2017 06:16:02 AM

சர்வதேச நட்புறவை கட்டியெழுப்பி பொருளாதார அபிவிருத்தியை துரிதமாக்குவதே இலக்கு: ஜனாதிபதி

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Feb 25, 5:38 pm

சர்வதேச நாடுகளுடன் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதனூடாக பொருளாதார முன்னேற்றத்தை துரிதமாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க காங்கிரஸின் நீதி செயற்பாட்டு மேற்பார்வைக் குழுவின் தலைவர் Bob Goodlatte உள்ளிட்ட அமெரிக்க உயர் பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கத்தின் பயணம் மற்றும் அதன் வெற்றியை பாராட்டிய காங்கிரஸ் உறுப்பினர்கள், தற்போது மேற்கொண்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார கொள்கைகளையும் பாராட்டினார்கள்.

ஐக்கிய அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையின் புதிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.