Monday, February 19, 2018 08:55:21 PM

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது; சுதந்திர தின செய்தியில் சம்பந்தன்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Feb 04, 10:21 am

கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.

நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வன்முறை முரண்பாடு ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாயினும், அந்த வன்முறைகளுக்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 69வது சுதந்திர தினம் இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகின்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எமது 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை வழங்கக் கிடைத்துள்ளமையையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.