Friday, January 19, 2018 12:04:55 AM

புலனாய்வாளர்கள் தம்மை மிரட்டுவதாக முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

Photo Gallery1 Photo By thiru - Wed Mar 23, 8:39 am

ஸ்ரீலங்கா இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் புனர்வாழ்வுபெற்று விடுதலையான முன்னாள் போராளிகளான தங்களுக்கு தொடர்ந்தும் நெருக்கடிகளை கொடுத்து வருவதாக முன்னாள் போராளியான கந்தசாமி கவிதா தெரிவிக்கின்றார்.

download (6)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழுமையாக அழித்துவிட்டதாக கூறும் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏன் இவ்வாறு தொடர்ந்தும் தங்களை கண்காணிப்பில் வைத்திருக்கின்றது என்று கேள்வி எழுப்பும் கவிதா, தங்களை நிம்மதியாக வாழ விடுமாறு புதிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்ற நிலையில் அம்பாறை, திருக்கோயில் கிராமத்தில் வசித்துவரும் முன்னாள் போராளி கந்தசாமி கவிதா ஐ.பி.சி தமிழ் செய்திக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

அம்பாறை திருக்கோயில் கிராமத்திலுள்ள இந்த சிறிய ஓலைக் கொட்டிலில் தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்து, முள்ளந்தண்டும் ஒரு காலும் செயழிழந்துள்ளதால், அதிக நேரம் நடக்கவோ இருக்கவோ முடியாத துர்ப்பாக்கிய நிலையில் முன்னாள் போராளியான கவிதா வாழ்ந்து வருகின்றார்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.