Sunday, February 18, 2018 11:00:15 PM

இலங்கையில் புதிய முதலீடுகளைச் செய்ய மலேஷியா தயார்; மைத்திரியுடனான சந்திப்பில் அப்துல் ரஷாக் தெரிவிப்பு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Dec 17, 11:16 am

இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள மலேஷியா தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அப்துல் ரஷாக் தெரிவித்துள்ளார்.

மலேஷியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மலேஷியப் பிரதமர் அப்துல் ரஷாக்குக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, மலேஷியப் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்புதலும், நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துதலுமே தனது முதன்மையான எதிர்பார்ப்புகள் என்று குறிப்பிட்டதுடன்; அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதுடன், பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக நட்பு நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்று வருவதாகவும் கூறினார்.

இலங்கைக்கும் மலேஷியாவிற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புதிய உடன்படிக்கைகள் மூலம் இருநாடுகளுக்குமிடையில் சுற்றுலா, கல்வி, விவசாயம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் போன்ற துறைகளில் புதிய உறவுகள் கட்டியெழுப்பப்படுமென தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை மாணவர்கள் மலேஷியாவில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முறைமையொன்றை தயாரிக்குமாறு மலேசிய பிரதமருக்கு ஆலோசனை வழங்கினார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் விவசாய அமைச்சர் என்ற வகையில் தான் மலேஷியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை நினைவுபடுத்திய ஜனாதிபதி, மலேஷியா விவசாயத் துறையில் அடைந்துள்ள முன்னேற்றத்தை தான் அவ்வேளையில் கண்ணுற்றதாகவும் இலங்கையின் விவசாயத்துறைக்கு மலேஷியாவின் தொழில்நுட்ப உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.