Tuesday, January 16, 2018 02:25:58 AM

பேய் அவ்வளவு கறுப்பில்லை; தமிழில் தேசிய கீதம் பாடுவதும் தவறில்லை: மனோ

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Dec 02, 9:12 am

manoஉண்மையிலேயே பேய் அவ்வளவு கறுப்பில்லை என்பது போன்று, தமிழ் மொழியில் தேசியக் கீதத்தைப் பாடுவதும் தவறில்லை. அது பெரிய பிரச்சினையும் இல்லை என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடும்போது ‘இலங்கை மாதா’ என்கின்றனர். தமிழில் ‘இலங்கை தாயே’ என்கின்றனர். இதில் என்ன தவறிருக்கின்றது? ‘ஈழம் தாயே’ என்று பாடவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ‘இலங்கை தாயே’ என்று, தமிழில் பாடும் பொழுதுதான், உண்மையிலேயே நாமும் இலங்கையர்கள் என்ற உணர்வு ஏற்படும்”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.