Wednesday, March 29, 2017 09:12:35 AM

மாவீரர் நினைவேந்தலுக்கான பகிரங்க வெளி! – புருஜோத்தமன் தங்கமயில்

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Nov 30, 9:47 am

maaveerarnaal2016மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை சற்றுப் பகிரங்கமாகவே இம்முறை நடத்த முடிந்திருக்கின்றது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விதையாக வீழ்ந்தவர்களை நினைவுகூருவதற்கான வெளியை இலங்கை அரசும், அதன் பாதுகாப்புக் கட்டமைப்பும் கடந்த காலங்களில், குறிப்பாக போருக்குப் பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளில் அனுமதித்திருக்கவில்லை. இறந்தவர்களை நினைவுகூருவதற்கான மக்களின் கூட்டுரிமையையே அரச பயங்கரவாதம் தன்னுடைய கொடுங்கரம் கொண்டு அடங்கியிருந்தது. ஆனால், இம்முறை அந்தக் கரத்தினை முற்றாக விலக்காமல் பிடியின் இறுக்கத்தை சற்றுத் தளர்த்தியிருக்கின்றது. (ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது.) அதுதான், மக்களை பெருவாரியாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நோக்கி பகிரங்கமாக வர வைத்திருக்கின்றது.

எந்தவொரு மாற்றமும் அரசியல் அடிப்படை சார்ந்ததுதான். அதுவும் தமிழ் மக்களை பிரதானப்படுத்தும் விடயங்களும், அதுசார் நிலைப்பாடுகளும் பெரும் அரசியல் சார்ந்தவை….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.