Tuesday, January 16, 2018 02:21:32 AM

மாவீரர் தினத்தை பகிரங்கமாக அனுஷ்டிப்பதற்கான வெளி!

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Nov 28, 5:55 am

maaveerar2016தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27)

உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் பொதுமக்கள் தமது உள்ளக் குமுறல்களை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி வந்து கொட்டித் தீர்த்தனர். அஞ்சலி செலுத்தி அழுது புரண்டனர்.

இறந்தவர்களை நினைவுகூர்வதும், அவர்களுக்காக பெரும் குரலெடுத்து அழுது தீர்ப்பதும் மனிதனின் அடிப்படை உரிமை. அதனை, தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்கள் தடுத்து வந்திருக்கின்றன. அல்லது, பாதுகாப்புக் கெடுபிடிகளை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்திருந்தன. அந்த நிலையில், நேற்றைய மாவீரர் தின நிகழ்வுகள் மக்களின் பெரும் பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, இறுதி மோதல்களுக்குப் பின்னராக கடந்த காலத்தில் மாவீரர்களை மாத்திரமல்ல, போரில் கொல்லப்பட்ட பொதுமக்களைக் கூட நினைவுகூர்வதற்கு தடை விதிக்கப்பட்டது….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.