Tuesday, January 16, 2018 02:17:59 AM

தமிழர்களுக்கான அதிகாரம்; இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்: சம்பந்தன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Mar 21, 11:51 am

sampausemதமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைக்கும் வகையிலான தீர்வொன்றுக்கு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, புதிய அரசாங்கம் பதவியேற்றபோது சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை இணங்கிக்கொண்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்னும் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்புக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.