Tuesday, January 16, 2018 02:08:28 AM

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஐ.தே.க.வும், சு.கா.வும் சம்பந்தனுடன் பேசி வருகின்றன: ரணில்

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Nov 09, 12:42 pm

ranil_maith_chanthiபுதிய அரசியலமைப்பில் சகல இன மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன.

அதனொரு கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறையும் தருணத்தில் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.