Tuesday, January 16, 2018 02:13:39 AM

‘கருணா’ சுதந்திரமாக நடமாடலாம் என்றால்; ஏன் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது?: சுவாமிநாதன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Nov 07, 8:58 am

swamiதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்து பாரிய குற்றங்களோடு சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ‘கருணா அம்மான்’ என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனும்,

‘கே.பி’ என்கிற செல்வராஜா பத்மநாதனும் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறு குற்றங்கள் புரிந்த அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது என்று சிலைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு, அதனைச் சுட்டிக்காட்டி அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல நடவடிக்கைகள் மேற்கொண்டும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் இறுதியாக நவம்பர் 07ம் திகதிக்குள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட, ஓர் அவசர மனு ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.