Tuesday, January 16, 2018 02:21:17 AM

அதிகாரப் பகிர்வு என்பது சமஷ்டியா, ஒற்றையாட்சியா என்கிற சொற்பிரயோகத்தில் இல்லை: சம்பந்தன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Oct 25, 8:52 am

sampanthan“அதிகார பகிர்வு என்பது சமஷ்டியா? அல்லது ஒற்றையாட்சியா? என்ற சொற்பிரயோகத்தில் இல்லை, அது உள்ளடக்கத்தில் தான் தங்கியுள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அரசியலமைப்பில், மாகாண மற்றும் பிராந்திய மட்டங்களில் இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு கரடியனாறு விவசாய பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு உரையாற்றிய போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.