Tuesday, January 16, 2018 02:16:15 AM

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் படுகொலைகளுக்கு நீதி வழங்குதல் அடிப்படை அறமாகும்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Oct 21, 9:00 am

mqdefault“இலங்கையில் தமிழர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களிற்கு எவ்வாறு நீதி கிடைக்கவில்லையோ,

அதே போன்று படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜன் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களிற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை.” என்று வடக்கு- கிழக்கு ஊடக அமைப்புக்கள் சார்பில், யாழ். ஊடக அமையத்தினால் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

மிக நெருக்கடியான கால கட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து ஊடகப் பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 16 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் படுகொலைகள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னரே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இலங்கையின் ஊடகச் சூழல் என்பது எப்போதுமே பெரும் அச்சுறுத்தலுக்குள்ளேயே இருந்து வந்திருக்கின்றது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றமை அல்லது கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்படுகின்றமை, தாக்குதலுக்கு உள்ளாகின்றமை மற்றும் ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றமை அல்லது எரியூட்டப்படுகின்றமை உள்ளிட் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்திருக்கின்றன. இந்தக் குற்றங்களை நிகழ்த்துபவர்கள் மீதான நடவடிக்கையோ, வழக்கு விசாரணைகளோ நீதியாக முன்னெடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பதிவுகளைக் தேடினால் அது ஏமாற்றமான பதில்களை வழங்கும்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.