Wednesday, December 13, 2017 09:37:58 AM

போருக்குப்பின் பார்வை மற்றும் செவிப்புலனற்ற பிள்ளைகளுக்கான பாடசாலை..

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Oct 17, 9:42 am

sisterகிறிஸ்டியன் ஹட்டர் (Christian Hutter) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு புகைப்பட மற்றும் காணொளிக் கலைஞர். இவர் இலங்கைக்கு விஜயம் செய்யும்போதெல்லாம் தான் கண்டுணர்ந்த அனுபவங்களை ஆவணப்படுத்தி வருபவர்

கடந்த வருடம் நான் மேற்கொண்ட ஆறு மாத இலங்கைப் பயணத்தில் யாழ்ப்பணத்தில் உள்ள பார்வை மற்றும் செவிப்புலனற்ற பிள்ளைகளுக்கான நஹ்பில்ட் (Nuffield) பாடசாலையைத் தரிசிக்கக் கிடைத்தது. அங்கு சென்ற சிலபொழுதுகளிலேயே அவர்களது அன்றாட செயற்பாடுகளில் நானும் ஒன்றிவிட்டேன். இருபது வருடங்களாக நடந்தேறிய கொடூர யுத்தத்தின் விளைவால் குண்டுதுளைத்த சுவர்களுக்கும், செல்லரித்த சுவடுகளுக்கும் நடுவே அவர்களது வாழ்வு எவ்வாறு நகர்கிறதென்பதை அறியும் ஆர்வத்திலேயே முதலில் அவர்களைப் பின்தொடர்ந்தேன்.

வடக்கின் ஊனமுற்ற பிள்ளைகளின் கல்வி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை திறம்படச் சித்தரிப்பதே எனது நோக்கு. இலங்கை முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏதோவொரு விருத்தி நடந்தேறிக்கொண்டே இருக்கின்றது. அவ்வாறான பதிவுகளைப் பகிர்ந்துகொள்வது சிறப்பெனக் கருதுகிறேன்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.