Sunday, February 18, 2018 01:12:59 PM

"பெருந்தோட்டக் காணிகள் தொழிலாளர்களுகே"-அமைச்சர் திகாம்பரம்

By BBC Tamil - Sun Mar 20, 9:55 am

இலங்கையில் பெருந்தோட்டங்களை பகிர்ந்தளிப்பதாக இருந்தால், அதைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என அமைச்சர் திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

Image caption

மலையப் பகுதி மக்கள் தொடர்ந்து நலிந்த நிலையிலேயே உள்ளனர்

பெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் சம அளவில் பகிர்தளிப்பது தொடர்பான யோசனையை, அரசாங்கத்தின் பங்காளியான தொழிலாளர் தேசிய தொழிற்சங்கம் கடுமையாக எதிர்கிறது என அதன் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் பெருந்தோட்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என நுவரேலியா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் கூறினார்.

தேயிலைத் தோட்டங்களை தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் சம அளவில் பகிர்ந்தளிப்பது தொடர்பாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸநாயக்கா அண்மையில் யோசசையொன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

Image caption

நுவரேலியா ஹட்டன் கூட்டத்தில் அமைச்சர் பழனி திகாம்பரம்

இதற்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம் தேயிலை தொழிற்சாலைகள் மட்டுமே நிர்வாகத்திடம் இருக்க வேண்டுமே தவிர தோட்டங்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Comments are closed on this post.