Tuesday, January 16, 2018 02:22:04 AM

யார் புலிக்கதை கூறினாலும், தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடமே வழங்கப்படும்: ருவான் விஜயவர்த்தன

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Oct 08, 9:42 am

ruwanயார் புலிக்கதை சொல்லி இனவாதம் பேசினாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடமே மீளவும் கையளிக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் பின்நிற்கப்போவதில்லை. தமிழ் மக்களின் காணிகளை மீளவும் அவர்களுக்கு வழங்குவதை எந்த இனவாதிகளினாலும், பிரிவினைவாதிகளினாலும் தடுக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றி புலிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் செயலை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்ட போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.