Sunday, February 18, 2018 01:14:51 PM

மட்டக்களப்பில் 12 இந்தியர்கள் கைது

By BBC Tamil - Sat Mar 19, 9:02 am

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து, ஆயுர்வேத மருந்துப் பொருட்களை விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐந்து பெண்கள் உட்பட 12 இந்திய பிரஜைகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image caption

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் குடிவரவுச் சட்டங்களை மீறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியிலுள்ள தனியார் தங்குமிட விடுதியொன்றில் தங்கியிருந்து மருந்து பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் இந்தியத் தயாரிப்பான ஆயுர்வேத மருந்துப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார்கள் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image caption

கைதானவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுர்வேத மருந்துப் பொருட்கள்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்குள் பிரவேசித்து குடிவரவு – குடியகல்வு சட்டங்களை மீறும்வகையில் சட்ட விரோதமான முறையில் வியாபராத்தில் இவர்கள் ஈடுபட்டடதாக காவல்துறை கூறுகிறது.

Leave a Reply

Comments are closed on this post.