Monday, February 19, 2018 08:46:54 PM

ஐ.நா. அமைதி காக்கும் படைக்கு இலங்கை வழங்கும் ஆதரவு வரவேற்கத்தக்கது: பான் கீ மூன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Sep 09, 8:46 am

Ban-Ki-moonஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைப்பிரிவுக்கு இலங்கை வழங்கும் ஆதரவு வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இலண்டன் நகரில் நடைபெற்ற அமைதி காக்கும் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைதி காக்கும் படைப்பிரிவுக்கு தங்களது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றமை வரவேற்கத்தக்கது. இந்நிலையில் நாடுகளில் உள்ள பாதுகாப்பு படைகள் மற்றும் பொலிஸ் ஆகியவற்றுடன் அமைதி காக்கும் படைப்பிரிவு இணைந்து செயற்பட்டுவரும் நிலையில் அதனை மேம்படுத்த வேண்டும்.” என்றும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.