Monday, February 19, 2018 08:43:53 PM

இலங்கை தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார் சேரன்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Aug 29, 9:33 am

cheranஅன்பு இலங்கைத்தமிழ் சகோதரர்கள்அனைவருக்கும் வணக்கம்…

முதலில் இவ்வளவு காலம் என்னை சகோதரனாக ஏற்றமைக்கு (எனக்கு எந்த தகுதியும் இல்லாமல்) நன்றி…

நீங்களும் இன்னும் சில பல சகோதரர்களும் இங்கு விமர்சனம் என்ற பெயரில் என்னைப்புகழ்ந்த எல்லா வார்த்தைகளையும் மனமாற ஏற்றுக்கொள்கிறேன்..

காலம் எனக்கு சில உண்மைகளை என் கண்முன் காட்டியிருக்கிறது….

என்னை புரிந்துகொண்டவர்கள் என் சொந்தங்கள் என்னை தவறாக எடுக்கமாட்டார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து பேசிய எனக்கு, என்னைப்பிடிக்காதவர்கள் சிலர் என் திரைப்படங்களை பிடிக்காதவர்கள் சிலர் ஒரு மேல்பூச்சுக்காக என்னை சகோதரன் என அழைத்திருக்கிறார்கள் என இப்போது உணர்த்தியிருக்கிறது.

கடந்த 5 நாட்கள் நான் உள்நோக்கமில்லாமல் சொன்ன வார்த்தைகளுக்கு பதிலாக என்மேல் மானாவாரியாக புழுதிவாரி இரைத்ததில் இருந்து புரிந்துகொண்டேன்…

உங்களின் உண்மையான அன்பை நான் பெற்றிருந்தால் தவறே செய்திருந்தாலும் ஒரு வாய்ப்பை கொடுத்து நான் என்ன பதில் சொல்கிறேன் என கேட்டிருப்பீர்கள்…….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.