Monday, December 11, 2017 12:04:14 PM

பான் கீ மூனின் வருகை சந்தேகத்துக்கிடமானது: வாசுதேவ நாணயக்கார

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Aug 27, 9:13 am

Vasudeva Nanayakkaraஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், அவசர அவசரமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை சந்தேகத்துக்கிடமானது என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவசரமாக இலங்கைக்கு வருகின்றார். இலங்கை ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடென்ற வகையில் அவரை வரவேற்கின்றோம். ஆனால் அவரது வருகை தொடர்பில் எவ்விதமான தகவலும் வெளிப்படவில்லை. எதற்காக வருகின்றார்? நோக்கம் என்ன? என்பது நாட்டு மக்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே, சந்தேகங்கள் காணப்பட்டாலும் அவரை வரவேற்கின்றோம்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.