Sunday, February 18, 2018 11:02:38 PM

சந்திரிக்காவுக்கு மூளை பாதிக்கப்பட்டுள்ளது; அதனால் புலம்புகின்றார்: உதய கம்மன்பில

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Aug 16, 11:11 am

udhayaதமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு மூளை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் கண்டமாதிரியும் புலம்பி வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் நான்கில் மூன்று பகுதியை தனது காலத்தில் முடித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிகாலத்திலேயே யுத்த களத்தில் இராணுவத்தினர் படுதோல்விகள் மூன்றை சந்தித்தனர். 1996ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவப் படைத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் வன்னியிலிருந்த ஒட்டுமொத்த இராணுவப்படைத்தளங்களும் முற்றாக அழிக்கப்பட்டன. அதன் பின்னர் ஆனையிறவு படைத்தளம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.