Tuesday, January 16, 2018 02:24:57 AM

மது, புகைத்தல் பழக்கமில்லாத முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகின்றது?; சிவசக்தி ஆனந்தன் கேள்வி!

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Aug 10, 10:26 am

sivaதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும் போது மது மற்றும் புகைத்தல் பழக்கத்திற்கு உட்படாதவர்கள்,

அரச புனர்வாழ்வின் பின்னர் எவ்வாறு தொடர்ச்சியாக புற்றுநோயினால் உயிரிழந்து வருகின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 12,000 முன்னாள் விடுதலைப் புலி போராளிகளில் 107 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பெரும்பாலோனோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டே உயிரிழந்துள்ளனர். மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்கத்திற்கு கடுமையான கட்டுப்பாடு விதித்திருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொற்றாநோயான புற்றுநோய்க்கு எவ்வாறு ஆளானார்கள் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவசக்தி ஆனந்தன் மேற்கண்ட கேள்விகளைத் தொடுத்தார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.