Monday, February 19, 2018 08:47:33 PM

படுகொலைகளில் இதுவே கொடூரமான படுகொலை!

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Aug 05, 10:35 am

Mothirதிருகோணமலை மூதூரில் தமது 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நம்பிக்கையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என பிரான்ஸின் தொண்டு நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

எக்சன் எகெய்ன்ட் ஹங்கர் என்ற இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் வேரோனிக்கியு என்ரியின்ஸ் (Veronique Andrieux) இலங்கை வந்துள்ள நிலையில் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப்படுகொலைகள் இடம்பெற்று 10 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நான்கு பெண்கள் உட்பட்ட தமது பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

இது 37 வருடக்கால போரில் மிகவும் மோசமான படுகொலையாக கருதப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ஏற்றுக்கொண்ட சர்வதேச பொறிமுறையின் ஊடாக விசாரணை விடயங்களை உரியமுறையில் செயற்படுத்துகிறதா?…

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.