Monday, December 11, 2017 12:02:53 PM

முன்னாள் போராளிகளுக்கு விஷம் ஏற்றவில்லை: இராணுவம்

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Aug 03, 11:10 am

Brigadier-Jayanath-jayaweeraஇறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

“இதுவொரு பௌத்த நாடு. இங்குள்ள மக்கள், தர்ம சிந்தனைகளைக் கொண்டவர்கள். இங்குள்ள மிருகத்துக்கேனும் விஷம் வைக்காத இலங்கை இராணுவம், முன்னாள் போராளிகளுக்கு ஒருபோதும் ஊசி மருந்தேற்றவில்லை. இக்குற்றச்சாட்டை, இராணுவம் முற்றாக மறுக்கின்றது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வுக் காலத்தில் முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினரால் விஷ ஊசி ஏற்றப்பட்டதாகவும், இதனால் சில போராளிகள் உயிரிழந்ததாகவும், பலரும் பலவீனமாக நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வின்போது, முன்னாள் போராளியொருவர் தெரிவித்திருந்தார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.