Thursday, February 22, 2018 07:43:09 AM

கனடா வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்; மைத்திரி, ரணில், சம்பந்தனை சந்திப்பார்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Jul 27, 9:22 am

stephane-dionகனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டையன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை இலங்கை வருகின்றார்.

அவர், நாளையும் நாளை மறுதினமும் இலங்கையில் தங்கியிருப்பார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 13 வருடங்களில், கனடா நாட்டிலிருந்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் முதலாவது வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டையன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமையில் கனடாவில் அரசாங்கம் உருவாகி, ஓராண்டுக்குள் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர், நாளை வியாழக்கிழமை இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்தவுள்ளதுடன், இது தொடர்புடைய ஊடகவியலாளர் மாநாடொன்றும் நடத்தப்படவுள்ளது.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.