Tuesday, January 16, 2018 02:20:16 AM

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை: ரணில்

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Jul 08, 3:42 am

ranilஇலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அவர்கள் வந்து மீன்பிடிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“வர்த்தக ரீதியாக ட்ரோலர்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதை சம்பிரதாயபூர்வ மீன்பிடி என ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை கடற்பரப்புக்குள் வந்து குறிப்பிட்ட நாட்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எவ்வாறானதொரு முடிவு எடுப்பதாயினும், அது வடக்கு மாகாண மீனவர்களின் விருப்பத்துடனேயே எடுக்கப்படும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.