Sunday, February 18, 2018 11:02:28 PM

மத்திய வங்கியின் செயற்பாடுகள் சுதந்திரமாக முன்னெடுக்கப்படும்: இந்திரஜித் குமாரசுவாமி

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Jul 05, 10:39 am

kaa_cmyஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுக்கு அமைய எவருக்கும் பயப்படாது மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுதந்திரமாகவும்,

நேர்மையாகவும் முன்னெடுக்கவிருப்பதாக மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக நேற்று திங்கட்கிழமை பதவியேற்ற பின்னர், வங்கி ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து சுதந்திரமாக செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு மார்க்கங்கள் இருக்கின்றன. இது குறித்து தலைவர்களுடன் பேசியிருப்பதுடன், மத்திய வங்கி சுதந்திரமாக செயற்பட்டு, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது தொடர்பில் தனது நிலைப்பாட்டை அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர், “மத்திய வங்கி இலங்கையிலுள்ள நிறுவனங்களில் மிகவும் முக்கியமானதொரு நிறுவனமாகும். இவ்வாறானதொரு நிறுவனத்தின் ஆளுநர் என்ற ரீதியில் இதன் புகழை பாதுகாக்க வேண்டியது முக்கியமான கடமையாகும்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.