Tuesday, January 16, 2018 02:20:30 AM

வெளிநாடு வாழ் இலங்கையர்கள் 20,000 பேருக்கு இவ்வருட இறுதிக்குள் இரட்டைப் பிரஜாவுரிமை!

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Jul 02, 10:35 am

sri-lanka-passportவெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் 20,000 பேருக்கு இந்த வருட இறுதிக்குள் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், 1700 பேருக்கு எதிர்வரும் 11ஆம் திகதி இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

2015 ஜனவரி 08ஆம் திகதி முதல் இதுவரையில் சுமார் 10,000 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்தில் போலல்லாமல் தற்போது மிகுந்த நேர்மையுடனும் விரைவாகவும் இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கூறியுள்ளது.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.