Monday, February 19, 2018 08:37:27 PM

இலங்கை மீதான இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கத் தயார்: மங்கள சமரவீர

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Jun 30, 8:40 am

mangalaஇலங்கையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளின் கலந்து கொண்டுள்ள அவர், நேற்று புதன்கிழமை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அதன்போதே, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீர கூறியுள்ளதாவது, “பொறுப்புக் கூறும் நீதி விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீடு குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் வெளியிட்டுவரும் கருத்துக்கள் இறுதியானவை அல்ல. இது குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்.

எனக்குத் தெரிந்தவரை போர் இடம்பெற்ற காலப் பகுதியில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் அறிக்கைகள் பல வெளியாகியுள்ளன.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.