Tuesday, January 16, 2018 02:15:41 AM

வெளிநாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் இலங்கைத் தூதரக சேவைகளைப் பெறமுடியும்: ஹர்ஷ டி சில்வா

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Jun 24, 10:51 am

Harsha+de+silvaவெளிநாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள், அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் கொன்சியூலர் சேவைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் அவ்வாறானவர்களுக்கான கொன்சியூலர் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலைமை மாற்றப்பட்டிருப்பதுடன், கடந்த காலத்தில் ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து கவலை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகதிகளாக வெளிநாடுகளில் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்துள்ள இலங்கையர்கள், இலங்கையர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனரா? அவர்களுக்கு கொன்சியூலர் சேவை பெற்றுக் கொடுக்கப்படுகிறதா என்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “வெளிநாடுகளில் புகலிடம் கோரி அல்லது அகதி அந்தஸ்துகோரி நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள், அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் கென்சியூலர் சேவையப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எந்தத் தடையும் இல்லை….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.