Monday, December 11, 2017 12:00:53 PM

பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து முழுமையாக விலகுகிறேன்: பஷீர் சேகுதாவூத்

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Jun 21, 10:13 am

baseerபாராளுமன்றம், மாகாண சபைகள் உள்ளிட்ட மக்களை தேர்தல்களின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும்,

முன்னாள் அமைச்சருமான பஷீர சேகுதாவூத் அறிவித்துள்ளார்.

அதுதொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கடந்த 27 வருடகாலமாக செயற்பட்டுவந்த பிரதிநிதித்துவ அரசியல் முறைமையில் இருந்து இன்று தொடக்கம் முழுவதுமாக விலகிக் கொள்ளும் எனது தீர்க்கமான தீர்மானத்தை இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் இவ்வறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாராளுமன்றம், மாகாணசபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் இனிவரும் காலத்தில் ஒரு வேட்பாளராக பங்குபற்றப் போவதில்லை என்றும், எந்தவொரு கட்சியின் தேசியப்பட்டியலிலோ, அல்லது எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வரும் வேறு ஏதேனும் முறையிலோ பாராளுமன்றத்திற்கோ மாகாணசபைக்கோ மக்கள் பிரதிநிதியாக செல்லப்போவதில்லை என்பதையும் பகிரங்கமாக அறியத்தருகிறேன்.

1981ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரையான 13 வருடகாலம் ஈரோஸின் அங்கத்தவராக செயற்பட்டேன்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.