Sunday, February 18, 2018 11:02:18 PM

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு ஒருபோதும் பாதிப்படையாது: மைத்திரிபால சிறிசேன

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Jun 18, 4:59 pm

maithசில கடும்போக்காளர்கள் பிழையான வியாக்கியானங்களை முன்வைத்து வருகின்ற போதிலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு ஒருபோதும் பாதிப்படையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் நேற்று சனிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. அந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “யாழ். துரையப்பா விளையாட்டரங்கை இந்தியப் பிரதமருடன் இணைந்து திறந்து வைப்பதில் மகிழ்சியடைகின்றேன். இதன் முழுமையான புனர்நிர்மாணச் செலவையும் இந்தியா ஏற்றுக்கொண்டது. இதற்காக இந்தியப் பிரதமருக்கும் – இந்திய மக்களுக்கும், இலங்கை அரசு சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.