Thursday, February 22, 2018 07:31:50 AM

திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்

Photo Gallery1 Photo By thiru - Mon Jun 13, 2:23 am

refugee_3திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 5பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

நாதன், ஜெயரதன், ஆனந்தன், ராஜேந்திரன், யுகப்பிரியன் ஆகியோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தங்களுக்கு எதிரான வழக்குகளில் ஜாமின் பெற்று வெளியே வந்தாலும், கியூ பிரிவு போலீசார் தங்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் வழக்கு போட்டு, தங்களது விடுதலையை தடுத்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும், தங்கள் மீது பொய் வழக்கு போடுவதை கியூ பிரிவு போலீசார் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இதே கோரிக்கையை முன்வைத்து மொத்தமுள்ள 12 இலங்கைத் தமிழர்களில் 4 பேர் கடந்த 8ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.