Thursday, February 22, 2018 07:29:28 AM

வெற்றிலை விவசாயத்தை பற்றி புகளூர் வெற்றிலை விவசாயிகள் சங்கச் செயலாளர் க.ராமசாமி பேட்டி

By thiru - Sat Jun 11, 7:04 am

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள வேலாயுதம்பாளையம், குளித்தலை, மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15,000 ஏக்கருக்கு மேல் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. கற்பூரம், வெள்ளை பச்சைக்கொடி என இருவகையான வெற்றிலைகள் பயிரிடப்படுகிறது.

தற்போது மாவட்டத்தில் வெற்றிலை உற்பத்தி அதிகம் இருந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் வெற்றிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுதொடர்பாக புகளூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கச் செயலாளர் க.ராமசாமி கூறுகையில்,
மூலிகை பயிராக உள்ள கரூர் மாவட்ட வெற்றிலைக்கு சுதந்திரத்திற்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது நம் நாட்டிற்குள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Comments are closed on this post.