Thursday, February 22, 2018 07:29:11 AM

இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்ற 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Photo Gallery1 Photo By thiru - Fri Jun 10, 10:57 pm

Jayaஇலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி இருக்கிறார்.

30-ந் தேதி மீன் பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். இதேபோல் கடந்த 2-ந் தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அதன்பிறகு 4-ந் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரும், 9-ந் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 21 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.